Thursday, 24 May 2012

ஆண் குறிகளை வீரியமாக்க வீபோவில் விசேட சிகிச்சை......



                             குடும்ப வாழ்வில் ஈடுபடும் ஆண்களில் பலருக்கு குறிக்கப்பட்ட வயதைத் தாண்டிய பின்னர் ஆண்குறி வீரியம் குன்றிவிடுவதுண்டு. 


                             இவ்வாறு வீரியம் குன்றி திருப்திகரமான பாலியல் நடவடிக்கையில் ஈடுபட முடியாதவர்களுக்கு வீபோ வைத்தியசாலையில் விசேட வைத்திய சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


                           ஆண் குறியில் இரத்தச் சுற்றோட்டம் தடைப்பட்டு ஏற்படும் சோர்வு நிலையை போக்கி, இரத்த அடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் அதிர்சி விசைகளை பாய்ச்சி மறுபடியும் வீர்யம் கொடுக்கிறார்கள். 


                           இதனால் சோர்வுற்ற ஆண்குறி இரத்த அடைப்பின்றி புத்துற்சாகத்துடன் செயற்பட இவர்கள் உதவுகிறார்கள். முதலில் இரத்த குழாய்கள் அடைப்;பு நீக்கப்பட்டு, பின் ஐந்து வாரங்கள் வைத்தியம் செய்யப்படுகிறது. 42 – 60 வயதுடைய 15 ஆண்கள் இந்தச் சிகிச்சைக்கு உள்ளாகியுள்ளனர். 


                             சுமார் ஐந்து வார சிகிச்சைக்குப் பின்னர் 2 பேர் புது வீரியம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஆண் குறியை அண்டி அழுத்தம் கூடிய அலைகளை பாய்ச்சி இந்த வைத்தியம் செய்யப்படுகிறது. 


                              இலங்கையில் ஆயுர்வேத வைத்தியத்தில் லேகியங்கள் மூலம் வழங்கப்பட்ட வீரியச் சிகிச்சை இங்கு புதுவிதத்தில் விஞ்ஞானரீதியாக மேற் கொள்ளப்படுகிறது. இந்தச் சிகிச்சை 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

labels:ஆண்குறி, லேகியங்கள்,

No comments:

Post a Comment