Thursday, 17 May 2012

கணவன், மனைவிக்கு இடையே படுக்கை அறையில் காதல்..........

                        கணவன், மனைவிக்கு இடையே படுக்கை அறையில் காதல் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் அவர்களுக்குள் நிகழும் செக்ஸ் உறவில் நேசமும், மனம் லயிக்கும் நெருக்கமும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

                   இருவருக்குமே இருக்கும் மனநெருக்கடியும், பிரச்சினைகளும், சோர்வும் படுக்கை அறையை பெயரளவுக்கு உடல்கள் மட்டும் இணையும் இடமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. 
                   கணவன்-மனைவி படுக்கை அறை உறவு ஏதோ ஒரு சடங்கு, சம்பிரதாயம் போல் ஆகிவிட்டது. இந்த நிலையை சமூகம் உணர்ந்து விழித்துக்கொள்ளா விட்டால் எதிர்காலத்தில் கணவன், மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகள் எல்லையில்லாமல் போய்விடும். 

                        நகரத்தில் வாழும் 46% திருமணமான ஆண்களுக்கு செக்ஸ் மீது இருக்கும் ஆர்வம் குறைந்து %கொண்டே இருக்கிறது. இதனால் அவர்களது தாம்பத்ய வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாகுகிறது. மேற்கண்டவர்களில் 29 % பேர் நிறைய சம்பாதிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வேளையிலே மிகவும் சோர்ந்துபோகிறார்கள். 

                     வாரத்தில் ஒரு முறையாவது உறவு வைத்துக்கொள்ளாவிட்டால் மனைவி மீது எங்களுக்கு பாசம் இல்லை என்று நினைத்துவிடுகிறார்கள். அப்படி ஒரு எண்ணம் அவர்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் படுக்கையை பகிர்ந்துகொள்கிறார்கள்.
                 இந்த மாதிரியான எண்ணத்துடனே அவர்கள் படுக்கையை பகிர்ந்து கொள்வதால் அவர்களையே அவர்கள் ஏமாற்றிக்கொள்வதோடு, தங்கள் மனைவிகளின் உணர்வு களையும் மழுங்கடிக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாமல் போய்விடுகிறது.
  
                இப்படி திருப்தியில்லாமல் உறவு வைத்துக்கொள்வதாலும், அதிக நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொள்வதாலும் காலப்போக்கில் அந்த கணவன், மனைவி இருவருக்குமே உறவில் எந்த சுகமும் இல்லாமல் போய்விடும். 
 
            
                     முடிவில் ஆசையே குறைந்துபோய் `திருப்திதராத இந்த உறவு நமக்குள் தேவையா?'-என்ற ரீதியில் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள். அதன் விளைவுகளால் குடும்ப உறவுகளில் சிக்கல் ஏற்படுகிறது. மட்டுமின்றி குழந்தை இல்லாத தம்பதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது''. 


labels:கணவன், மனைவி. செக்ஸ்,நேசமும், மனம்.

No comments:

Post a Comment