Monday, 21 May 2012

டீன் ஏஜ் பருவத்தில் அடிக்கடி நிகழும் சம்பவம்......


                                           முதலில், இது ஒரு நோயே கிடையாது. இது ஒரு சர்வ சாதாரணமான நிகழ்வுதான். கிட்டத்தட்ட 80% ஆண்களுக்கு,  

                                     குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தில் அடிக்கடி நிகழும் சம்பவம் தான் இது. சுய இன்பம் செய்வது போலவே, இதுவும் ஒரு வகை இயற்கையான விசயமே.

                                       இரண்டாவதாக, நீங்கள் சுய இன்பம் செய்வதில்லை என்று சொல்லி இருக்கிறீர்கள். கை அடிக்காதவர்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேற அதிக வாய்ப்புள்ளது. உங்கள் வயதில்,

                                      உங்கள் உடலுக்கும் (மனதுக்கும்) காமத்தின் வெளிப்பாடு தேவையாக இருக்கிறது. இதனால் தான் நீங்கள் தூங்கும்போது விந்து வெளியேறுகிறது.
சில மருத்துவர்கள், 

                                      ஈஸ்ட்ரோஜென் (estrogen) என்கிற பெண்மை ஹார்மோன் கலந்த மாத்திரைகளை மருந்தாக கொடுப்பார்கள். இதனால் உங்கள் ஆண்மை குறைந்து, சொப்பன ஸ்கலிதம் நிற்க வாய்ப்புள்ளது. 

                                 ஆனால் தயவு செய்து இந்த மாத்திரைகளை சாப்பிடாதீர்கள். ஏனென்றால் இது போன்ற மாத்திரைகளால் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளன. உதாரணமாக, உங்களுக்குப் பெண்களைப் போல மார்பகம் வளர வாய்ப்புள்ளது. (ஆண் மார்பக வளர்ச்சி பற்றி படிக்க, இங்கே சொடுக்குங்கள்) .




                                பல வினோதமான கனவுகள் வருவதாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள். நீங்கள் விழித்திருக்கும்போது சுய இன்பம் செய்தால், உங்கள் கற்பனைகளை கட்டுப்படுத்தலாம். ஆனால் நீங்கள் உங்கள் பருவத்தில் வரும் நியாயமான காம உணர்வுகளை வெளிப்படுத்தாதால், உங்கள் கனவுகள் விசித்திரமாக வருகின்றன.




                     பெண்களுக்கும் தூக்கத்தில் இது நிகழும். ஆனால் அவர்களுக்கு விந்து வெளியேறாமல், பெண்ணுறுப்பிலேயே திரவம் சுரந்து நின்று விடுவதால், அது வெளியே தெரியாது. ஏன் பல பெண்களுக்கு தூங்கி எழுந்த பின்பு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாமலும் இருக்க வாய்ப்பு உண்டு.


labls:ஹார்மோன்,ஈஸ்ட்ரோஜென்,

1 comment:

  1. hi mr frnd ..........my shiva
    நானும் பிளாக்கர் வைத்துள்ளேன் அந்த பிளாக்கரில் எப்படி adfly ads வைப்பது ....எனக்கு தெரியவில்லை .....தயவு செய்து சொல்லுங்க ......உங்க ப்ளாக் ல ந பாத்தன் ......shivadhanush908@gmail.com.....இந்த மெயில் கு செண்ட் பண்ணுங்க

    பிளாக்கர் நேம் :www.figuresalbum.blogspot.com

    ReplyDelete