இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியில் இடம்பெற்றிருந்த லூக் போமர்ஸ் தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு நேற்று இரவு சென்றுள்ளார். அங்கு தனது காதலனுடன் வந்திருந்த அமெரிக்க பெண் ஒருவருடன் சேர்ந்து லூக் மது அருந்தியுள்ளார்.
பின்னர் அந்த பெண் தூங்குவதற்காக அவரது அறைக்கு சென்றபோது பின்னாலேயே லூக்கும் சென்று தவறாக நடக்க முயன்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து லூக் கைது செய்யப்பட்டார்.
இன்று தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட லூக் திடீரென மயங்கி விழுந்தார்.
இதைத்தொடர்ந்து லூக்கிற்கு ஒருநாள் இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment