Tuesday, 29 May 2012

18 வயதுக்கு உட்பட்டவர்கள் பார்க்க வேண்டாம் என்ற எச்சரிக்கை

                              
                                                                    








ட்விட்டர் தளத்தில் நிர்வாண போஸ் போட்டோவை போட்டு பப்ளிசிட்டி தேடியிருக்கிறார் நடிகை பூனம் பாண்டே.  21 வயதாகும் நடிகையும், பிரபல மாடல் அழகியுமான பூனம் பாண்டே கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா வெற்றி பெற்றால் மைதானத்தில் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என்ற பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். ஆனால், இந்திய அணி அந்த போட்டியில் வெற்றி பெற்றும், பூனம் நிர்வாணமாக தோன்றி தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

                                                               
   இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிந்துள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடிகர் ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றால் நிர்வாண போஸ் கொடுப்பதாக மீண்டும் அறிவித்து இருந்தார். சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து இந்த முறை தனது வாக்குறுதியை காப்பாற்றிய பூனம் பாண்டே ட்விட்டர் இணைய தளத்தில் நிர்வாணமாக போஸ் கொடுத்து இருக்கிறார். 


                                                   18 வயதுக்கு உட்பட்டவர்கள் பார்க்க வேண்டாம் என்ற எச்சரிக்கையுடன் பூனம் பாண்டே படுத்திருப்பது போன்ற நிர்வாணப்படத்தை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

                                     "இந்தப்படம் ஒரு முன்னோட்டம்தான்; நான் நடித்து வெளிவர இருக்கும் புதிய சினிமா ஒன்றில் இதுபோன்ற ஏராளமான காட்சிகளை காணலாம், என்றும் பூனம் பாண்டே தனது புதிய படத்திற்கு இதன்மூலம் பப்ளிசிட்டியும் செய்துள்ளார்.

No comments:

Post a Comment